தேசிய குத்து சண்டை போட்டியில் மன்னார் முதன் முறையாக பதக்கம்.
மடு வீதி கட்டடையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தர்சன் மூன்றாம் இடத்தை பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய ரீதியில் மன்னார் மாவட்டம் முதன் முறையாக குத்து சண்டை போட்டியில் பதக்கம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதிய வளமும் பொருளாதார வசதியுமின்றி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இம் மாணவன் இச் சாதனையை படைத்துள்ளார்.
அத்துடன், சர்வதேச ரீதியில் சாதிக்க துடிக்கும் இவர் தனது பயிற்சிகளுக்கு தேவையான உதவிகள் எதுவும் இல்லாதிருப்பதாக கவலை தெரிவிக்கின்றார் .
சாதனையாளர் தர்சன் இன்று கட்டடையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களால் மடு சந்தியிலிருந்து மோட்டார் வாகன தொடரணி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், பாராட்டு விழாவும் நடைபெற்றுள்ளது.
மேலும், நிகழ்வில் அருட்தந்தையர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் மரிய சீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தர்சன் இம்மாணவருக்கும் பெற்றோருக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்க்கும் அதிபருக்கும் வலையக்கல்விப்பணிப்பாளர் திருமதி.மாலினி வெனிற்றன் அவர்களுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
தேசிய குத்து சண்டை போட்டியில் மன்னார் முதன் முறையாக பதக்கம்.
Reviewed by Author
on
July 12, 2018
Rating:

No comments:
Post a Comment