வவுனியாவில் மீட்கப்பட்ட மர்மப் பொருள்! அதிர்ச்சியில் மக்கள் -
பொலிஸாரின் அவரச தொலைபேசி அழைப்புக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சென்ற பொலிஸார் மரக்காரம்பளை பகுதியிலிருந்து. கைவிடப்பட்ட இரும்புப் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளனர்.
முற்றிலும் மூடப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பபட்ட இரும்புப் பெட்டகத்தினுள் பொருட்கள் எவையும் மறைத்து வைக்கப்பட்டிருகலாம் என்றும் புதையல் தோண்டும் நபர்களினால் இது மீட்கப்பட்டிருக்கலாம் என்றும் அதனை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த இரும்புப் பெட்டி தொடர்பில் அப்பகுதி மக்கள் பீதியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றல் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் மீட்கப்பட்ட மர்மப் பொருள்! அதிர்ச்சியில் மக்கள் -
Reviewed by Author
on
July 07, 2018
Rating:
Reviewed by Author
on
July 07, 2018
Rating:


No comments:
Post a Comment