நானாட்டான் மோட்டைக்கடை இந்து முன்பள்ளியின் 2018 ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டி
இந்து முன்பள்ளியின் 2018 ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டியானது 01.08.2018 (புதன்) முகாமைத்துவ குழு தலைவர் அவர்களின் தலைமையில்
ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பி.ப 3.30 மணிக்கு ஆரம்பமானது.
ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய குருக்கள் மற்றும் பிரதம விருந்தினர் ஏனை அழைக்கப்பட்ட விருந்தினர்களின் மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக திருமதி.க.யோகராசா (பிரதிப்பணிப்பாளர் - கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்ää மன்னார்) அவர்களும்ää சிறப்பு விருந்தினராக திருமதி.து.ளு. மார்க் (முன்பள்ளி பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் - (நானாட்டான் பிரதேச செயலகம்)ää அவர்களும்ää கௌரவ விருந்தினர்களாக திரு.இ.கோவிந்தராசா (தலைவர்- ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயம்) திரு.மா.ஜெகதீஸ்வரன் (தலைவர் - றீகன் ஸ்டார் விளையாட்டுகழகம்-நானாட்டான்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மற்றும் ஏனை முன்பள்ளி ஆசிரியர்கள் மாதர்கிராம சங்கங்களின் தலைவர்கள் ஆலய சபையினர் றீகன் ஸ்டார் விளையாட்டு கழக வீரர்கள் நலன் விரும்பிகள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் விளையாட்டு நிகழ்வினை தொடர்ந்து இடைவேளை நிகழ்வாக கண்கவர் உடற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றது.
பழையமாணவர்கள்ää பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து மாணவர்களின் வினோத உடைபோட்டி இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியில் பிரதம சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் பரிசளிப்பும் இடம்பெற்றது. இவ் விiயாட்டு ஆலய சபையினர் உதவிகளை செய்திருந்தனர். இவ்விளையாட்டு விழாவானது மாலை 5.45 மணியளவில் நிறைவுற்றது.
நானாட்டான் மோட்டைக்கடை இந்து முன்பள்ளியின் 2018 ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டி
Reviewed by Author
on
August 07, 2018
Rating:

No comments:
Post a Comment