இலங்கை தொடர்பில் தகவல் - 282 கொலைகள், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்:
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையான 7 மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் நாடளாவிய ரீதியில் 282 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் மற்றும் 1779 கொள்ளைச் சம்பவங்களும் இந்த 7 மாத காலப்பகுதிக்குள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
282 கொலைச் சம்பவங்களில் 28 கொலைகள் துப்பாக்கி பிரயோகத்தில் இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு 452 கொலைச் சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடர்பில் தகவல் - 282 கொலைகள், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்:
Reviewed by Author
on
August 17, 2018
Rating:

No comments:
Post a Comment