வரலாற்றை மாற்றியமைத்த பெண்களின் பட்டியல் -
அரசியல், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த பெண்களில் வரலாற்றை மாற்றியமைத்த செல்வாக்கு மிக்க பெண்களைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பின் முடிவில் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்த பெண்கள், அதிகம் பிரபலமாகாமல் இருந்து சாதித்து காட்டியவர்கள் ஆவர்.
அவர்களில் முதலிடத்தைப் பிடித்தவர் விஞ்ஞானி மேரி க்யூரி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த போலந்து நாட்டைச் சேர்ந்த மேரி, தனது கணவர் பியரி க்யூரியுடன் சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். யுரேனியம், பொலோனியம் என்ற இரு தனிமங்களைக் கண்டுபிடித்தார்.
அதனைத் தொடர்ந்து இயற்பியலிலும், வேதியியலிலும் இரண்டு நோபல் பரிசுகளை பெற்றார். இதன்மூலம், நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மற்றும் இரண்டு நோபல் பரிசுகளை வென்ற முதல் மனிதர் என்ற பெருமையையும் பெற்றார்.
பின்னர், புற்றுநோயை குணப்படுத்துவதற்காக கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஆனால், நீண்ட கால கதிரியக்க ஆராய்ச்சியின் விளைவாக அவருக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டு, தனது 66வது வயதில் மரணமடைந்தார்.
இவருக்கு அடுத்த இடத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்கரான ரோசா பார்க்ஸ் உள்ளார். இவர், தான் பேருந்தில் அமர்ந்திருந்தபோது எழும்படி கூறிய அமெரிக்கரை எதிர்த்தார். அப்போது தொடங்கிய அவரது போராட்டத்தால், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளைப் பெற காரணமாக அமைந்தார்.
3வது இடத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த எம்மலின் பான்க்ருஸ்ட் உள்ளார். இவர் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமைக்காக போராடி, இறுதியில் உரிமையை வென்றெடுத்தார்.
அதற்கு அடுத்த இடங்களில் பிரித்தானியர்களான, கணினி நிரல்களை உருவாக்கிய கணிதவியலாளர் அடா லவ்லேஸும், விஞ்ஞானி ரோசலிண்ட் ஃபிரான்க்ளினும் உள்ளனர்.
மேலும், முதல் இருபது இடங்களில் மார்க்ரெட் தாட்சர், விக்டோரியா ராணி, ஜேன் ஆஸ்டின், இளவரசி டயானாவும் இருக்கிறார்கள். இந்தியாவில் வாழ்ந்த அல்பேனியரான அன்னை தெரசா இருபதாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
வரலாற்றை மாற்றியமைத்த பெண்களின் பட்டியல் -
Reviewed by Author
on
August 11, 2018
Rating:
No comments:
Post a Comment