அழியும் அபாயத்தில் உள்ள தமிழர் அடையாளம் -
தமிழர்களின் அடையாளமாக காணப்பட்ட கல்வெட்டு ஒன்று, அழிவடையும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை த டைம்ஸ் ஒப் இந்தியா கூறியுள்ளது.
இலங்கையின் புராதன மன்னர்களுக்கும், தமிழகத்தின் பல்லவ மன்னர்களுக்கும் இடையில் இருந்த ராஜதந்திர தொடர்புகளைக் குறிக்கும் கல்வெட்டே இவ்வாறு அழிவடையும் ஆபத்தில் உள்ளது.
பல்லவ மன்னரான 2ஆம் நந்திவர்மனின் ஆட்சி காலத்தில் 8ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் துர்க்கை அம்மன் சிலை ஒன்றும் இந்த அபாய நிலையில் உள்ளது.
தமிழகம், செங்கல்பட்டு, ஒழாளூரில் உள்ள வரதராஜபெருமாள் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கல்வெட்டும், கற்சிலையும், சில வருடங்களுக்கு முன்னர் கட்டுமானப் பணியின் போது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த கல்வெட்டில் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பல்லவர் கால ராஜதந்திர மற்றும் நிர்வாக ரீதியான தொடர்புகள் தொடர்பான குறிப்பிப்புக்கள் உள்ளன.
அத்துடன், கி.பி 720 - 796ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்த இரண்டாம் நந்திவர்மன் காலத்துக்கு உரிய இந்த கல்வெட்டில், இந்த காலப்பகுதியில் தமிழகத்துக்கு விஜயம் செய்த இலங்கையின் ராஜதந்திரி தொடர்பான விபரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கல்வெட்டையும், சிலையையும் பாதுகாக்குமாறு மரபுரிமை செயற்பாட்டாளர்களால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதுடன், இந்திய தொல்லியலாளர்களால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அழியும் அபாயத்தில் உள்ள தமிழர் அடையாளம் -
Reviewed by Author
on
August 30, 2018
Rating:

No comments:
Post a Comment