முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம்? -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரனே நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கூட்டமைப்பின் வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சியில், மாவை சேனாதிராஜா வேட்பாளராக இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இது பற்றி கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் இனிமேல் தான் பேச வேண்டும் எனவும் கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் இந்த விடயம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியாகும் என த.தே.கூட்டமைப்பின் உறுப்பினரொருவர் குறித்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம்? -
Reviewed by Author
on
August 07, 2018
Rating:

No comments:
Post a Comment