மன்னாரில் சந்திரகாசன் மற்றும் மரிகருதாள் நாடகம் நூல்களின் வெளியீட்டு விழா....படங்கள்
நூல் வடிவம் பெற்ற மன்னாரின் தனித்துவம் மிக்க நாடகங்களில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு நாடகங்களான சந்திரகாசன் நாடகம் மற்றும் மரிகருதாள் நாடகம் நூல்களின் வெளியீட்டு விழாவானது.
25-08- 2018 மாலை 3-00 மணியளவில் உயிலங்குளம் RCTMS பாடசாலை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.- மரிகருதாள் நாடகம்-பாடிய வருடம் 1937 தொம்மை கட்டுக்காரன் அந்தோனிப்புலவர் காத்தான் குளம் நானாட்டான்
- சந்திரகாசன் நாடகம்-புலவர் விறாஸ்மொத்தம் கபிகேல் பாடிய வருடம்-1954 சுண்டுக்குளி மன்னார்
திரு.அ.பத்திநாதன் பிரதம செயலாளர்-வடமாகாணம்
திருமதி-பா.அபிராமி உதவிபணிப்பாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடமாகாணம்
திரு.சி.சத்தியசீலன் செயலாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
திருமதி.சுகந்தி செபஸ்ரியன் - வலயக்கல்விப்பணிப்பாளர் மன்னார்உதவிபிரதேச செயலாலர் K.சிவசம்பு இவர்களுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பிரதேச மற்றும் நகரசபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் கலாச்சார உத்தியோகத்தர்கள் இரண்டு நாடகத்தின் வழிமரபினர்கள் கலையார்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பம்சமாக இரண்டு நூல்களும் வெளியீடு செய்யப்பட்டதுடன் இரண்டு நாடகத்தில் இருந்தும் சிறுகாட்ச்சிகள் கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
விருந்தினர்கள் உரையின் சாரம்சம்
எமது மண்ணின் மக்களின் பாரம்பரியங்கலை கலாச்சாரமாண்பினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான பெரும் முயற்ச்சிகளின் தொடர்ச்சியாவே இவ்வாறன செயற்பாடுகள் செய்துவருகின்றோம்.
இப்படியான நிறைய செயற்பாடுகள் எமது மக்களினதும் மண்ணின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது அதனை நாம் எல்லோரும் சேர்ந்து செயற்பட வேண்டிய காலம் தான் இது.
நிகழ்ச்சி தொகுப்பினை திரு.யோண் பொஸ்கோ வழங்கினார்.
" பழைமை புதியவை ஆகின்றது...."
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

மன்னாரில் சந்திரகாசன் மற்றும் மரிகருதாள் நாடகம் நூல்களின் வெளியீட்டு விழா....படங்கள்
Reviewed by Author
on
August 26, 2018
Rating:
Reviewed by Author
on
August 26, 2018
Rating:






















































































No comments:
Post a Comment