அகதிகளை குறித்து குறை கூறிய பெண்: கடுமையாக எச்சரித்த கனடா பிரதமர் ட்ரூடோ -
2017 முதல் சுமார் 30,000 புலம்பெயர்ந்தோர் சட்ட விரோதமாக கனடாவுக்குள் நுழைந்து, பின் புகலிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் கியூபெக்கும் ஒண்டாரியோவும் புகலிடம் கோருவோர் தொடர்பாக செலவிடப்பட்டுள்ள பணப்பிரச்சினையை சரி செய்யுமாறு அரசை வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தன்னிடம் கேள்வி கேட்ட அந்த பெண்ணை கடிந்து கொண்டது சரியா என்று பிரதமர் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியபோது பயத்தை ஏற்படுத்தும் அரசியல் ஆபத்தானது என்று அவர் தெரிவித்தார்.
பிரித்தாளும் அரசியல் நாட்டை அபாயகரமான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இப்படிப்பட்ட ஒன்றை கனடா நாட்டவர்கள் தன்னிடம் எதிர்பார்க்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடந்த அந்த பேரணியில் அந்த பெண் பிரெஞ்சு மொழியில் மீண்டும் மீண்டும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் நாட்டுக்குள் நுழைந்ததால் கியூபெக்குக்கு ஏற்பட்ட செலவை எப்போது கனடா அரசாங்கம் திருப்பித் தரப்போகிறது என்று கேட்டார்.
இதனால் கோபமடைந்த பிரதமர் ட்ரூடோ, அந்த பெண்ணை பொறுமையில்லாதவர் என்று குற்றம்சாட்டியதோடு உங்கள் இன வெறிக்கு கனடாவில் இடமில்லை என்றும் கடிந்து கொண்டார்.
கியூபெக் பகுதிக்கு வந்த புகலிடம் கோருவோருக்காக செலவிடப்பட்ட பல மில்லியன் டொலர்களை கடந்த 18 மாதங்களாக ட்ரூடோ அரசு திருப்பி அளிக்க இயலாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையில் ஒட்டாவா இந்த ஆண்டு 310,000 பேருக்கு நிரந்தர வசிப்பிட உரிமம் வழங்க இருப்பதோடு 2020ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 340,000ஆக உயர்த்த இருக்கிறது.
ஆனால் ட்ரூடோவின் கருத்து அவரது நாட்டு மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதற்கு அவர்களது ட்விட்டர் செய்திகளே ஆதாரமாக உள்ளன.
அகதிகளை குறித்து குறை கூறிய பெண்: கடுமையாக எச்சரித்த கனடா பிரதமர் ட்ரூடோ -
Reviewed by Author
on
August 22, 2018
Rating:

No comments:
Post a Comment