வவுனியாவில் சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் போட்டி -
இதன்போது நிரந்தர அன்னாசி செய்கையாளருக்கான தெரிவு, சிறந்த அடர் முறையிலான மாமர செய்கையாளருக்கான தெரிவு, சிறந்த வீட்டுத்திட்ட தோட்ட செய்கையாளருக்கான தெரிவு, சிறந்த சேதன விவசாய செயற்கையாளருக்கான தெரிவு என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.
வடமாகாண சபையின் விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல் நீர் வழங்கல் நீர்ப்பானம் மற்றும் சுற்றாடல்
அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கீழ் விவசாய திணைக்களத்தின் செலவீன நிதி ஒதுக்கீட்டில் நிறந்த அன்னாசி செய்கையாளருக்கான தெரிவு, சிறந்த அடர் முறையிலான மாமர செய்கையாளருக்கான தெரிவு, சிறந்த வீட்டுத்திட்ட தோட்ட செய்கையாளருக்கான தெரிவு, சிறந்த சேதன விவசாய செயற்கையாளருக்கான தெரிவு ஆகிய தலைப்புக்களின் கீழ் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் விவசாயிகளுக்குப் பணப்பரிசில்கள், வெற்றிக்கேடயம் மற்றும் சான்றிதழ்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டியில் பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் உங்களது பகுதியிலுள்ள விவசாய போதனாசிரியர் காரியாலயத்திலும் மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர்
அலுவலகம் வவுனியாவில் போட்டி விதிமுறைகளை அறிந்து கொண்டு விண்ணப்ப படிவங்களைப் பெற்று கொள்ள முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விவசாயப் போதனாசிரியர் கையளிக்க வேண்டும்.
மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு உழவர் பெருவிழாவில் வைத்து கௌரவம் வழங்கப்படுவதுடன் கௌரவிப்பும் பணப்பரிசில்கள், கேடயங்கள், சான்றிதழ்கள் என்பனவும்
வழங்கப்படவுள்ளதாக பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் விரிவாக்கல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் போட்டி -
Reviewed by Author
on
August 22, 2018
Rating:

No comments:
Post a Comment