மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
மன்னார் உயிலங்குளம் பகுதியில் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 10-08-2018 வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
-வடமாகாண சுகாதார சுதேச வைத்தி மற்றும் சிறுவர் நன் நடத்தை பராமரிப்பு சேவைகள் அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள குறித்த சிறுவர் பாதுகாப்பு இல்லத்திற்கான அடிக்கல்லினை வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாட்டி வைத்தார்.
-இதன் போது மாகாண சிறுவர் நன் நடத்தை பாதுகாப்பு பராமறிப்பு திணைக்கள ஆணையாளர், மாகாண சிறுவர் நன் நடத்தை பாதுகாப்பு பராமரிப்பு உத்தியோகஸ்தர்கள்,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
August 11, 2018
Rating:

No comments:
Post a Comment