தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது
தலைமன்னார் புனிதலோறன்சியார் ஆலயத்திருவிழாவானது இவ்வருடம் ஆவணிமாதம் 1ம் திகதிபங்குத் தந்தை அகுஸ்ரின் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து 09 நவநாட்கள் வழிபாடுகளை ஒவ்வொருவலய உறுப்பினர்கள் பக்திசபைகள் சிறப்பித்தனர்.
தொடர்ந்து ஆவணி 10ம் திகதி வழிபாடானது அன்று காலை 6.30 மணியளவில் மன்னார் மறைமாவட்டஆயர் லயனல் இம்மானுவேல் பெனாண்டோஆண்டகை தலைமையில் திருவிழாதிருப்பலிஆரம்பமானது.
தொடர்ந்துஆயர் தந்தைஅவர்கள் மக்களுக்குஆசீர்வாதம் வழங்கிய பின்னர் திருச்சபையின் சொத்துக்களின் பாதுகாவலராம் புனித லோறன்சியாரின் திருச்சுருவசுற்றுப்பிரகாரம் இடம்பெற்றது. தொடர்ந்துஆயர் தந்தைஅவர்களினால் இறுதியாகதிருச் சொருபஆசீர்வாதம் வழங்கிய பின்னர் திருவிழாதிருப்பலி நிறைவுற்றது
-பாரி-

தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
August 11, 2018
Rating:

No comments:
Post a Comment