உலகில் வாழ தகுதி இல்லாத நகரங்களின் பட்டியலில் கொழும்பு
உலகில் வாழ தகுதியாக நகரங்களில் கொழும்பு தொடர்ந்தும் பின்னடைவை சந்தித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த வருடம் 124ஆம் இடத்தில் இருந்த கொழும்பு இம்முறை 130வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
உலக பொருளாதார புலனாய்வு பிரிவினால் தயாரிக்கப்பட்ட தரப்படுத்தலுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
140 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக ஸ்திரத்தன்மை, சுகாதாரம் பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சூழல், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கருத்திற் கொண்டு தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூகங்கள் மத்தியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வன்முறை நிலைமை மற்றும், அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சட்டத்தின் காரணமாக கொழும்பு நகரின் ஸ்திரத்தன்மை குறிப்பிடத்தக்களவு குறைவடைந்ததாக உலக வர்த்தக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
உலகில் வாழ தகுதியான நகரங்களில் கொழும்பு 124 ஆம் இடத்தில் இருந்து 130 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு இதுவே முதல் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தரப்படுத்தலுக்கமைய உலகில் வாழ கூடிய மிகவும் பொருத்தமான நகரமாக ஒஸ்ரியாவின் வியானா நகரம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உலகில் வாழ தகுதி இல்லாத நகரங்களின் பட்டியலில் கொழும்பு
Reviewed by Author
on
August 15, 2018
Rating:

No comments:
Post a Comment