முதன்முதலாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணையும் படத்தை
ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் வளர்ந்துவந்த காலக்கட்டங்களில் இசையுலகை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், இசைஞானி இளையராஜா. தற்போது வரை அவரது இசைக்கு இன்னும் யாரும் ஈடுவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது இடத்திற்கு அருகில் கொஞ்சம் வந்திருக்கிறார்,
அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா. காதல் பாடல்களுக்கு பெயர்பெற்ற இசையமைப்பாளரான அவரது திரைப்பயணத்தில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு தற்போதுதான் ரீஸ்டார்ட் ஆகியுள்ளது. இதனால் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அதில் ஒன்றில் தான் தனது தந்தை இளையராஜாவுடன் பணியாற்றவுள்ளார்.
இவர்கள் இருவர் மட்டுமில்லாமல் யுவனின் அண்ணனும் சேர்ந்துதானாம். இதை தர்மதுரை படத்தை இயக்கிய சீனுராமசாமி தான் இயக்கவுள்ளாராம்.
முதன்முதலாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணையும் படத்தை
Reviewed by Author
on
August 04, 2018
Rating:

No comments:
Post a Comment