17 கொலைகள்.....மனித மாமிசம் சாப்பிட்ட அரக்கன்..
அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் 1960ஆம் ஆண்டு பிறந்தவர் ஜெஃப்ரே டாமர். இவரது தந்தை லியோனல் டாமர் வேதியியல் ஆசிரியர் ஆவார்.
வசதியான குடும்பத்தில் பிறந்த ஜெஃப்ரே டாமர், சிறுவயதில் ஆரோக்கியமான சூழ்நிலையில் தான் வளர்ந்திருந்தார். ஆனால், ஜெஃப்ரேவின் பெற்றோர்கள் பிரிந்தபோது அவரது நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தான் ஒருபாலின உறவாளர் என்பதை தனது பதின் பருவத்தில் உணர்ந்த ஜெப்ஃரே, குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அதன் பின்னர் பலரை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி கொலை செய்ய ஆரம்பித்தார்.
தொடர்ந்து 17 பேரை கொலை செய்த ஜெஃப்ரே, அவர்களது உடல் பாகங்களை சேகரித்து உணவாக உட்கொண்டார். இவரது தந்தை இறந்த மிருகங்களை போத்தல்களில் அமிலங்களுடன் அடைத்து வைத்திருந்தார். அவற்றை ஜெஃப்ரே தனது கொலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்.
ஜெஃப்ரேவின் கடைசி கொலை முயற்சியில் இருந்து எட்வர்ஸ் என்பவர் தப்பினார். அவர் பொலிசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 1991ஆம் ஆண்டு ஜெஃப்ரே கைது செய்யப்பட்டார். இந்த விடயம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
ஏனெனில், ஒரு கொடூர கொலைகாரன் போல அல்லாமல், ஒரு கதாநாயகனைப் போன்ற தோற்றம் கொண்டவர் ஜெஃப்ரே. அதனைத் தொடர்ந்து, தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட ஜெஃப்ரே, தனக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரினார்.
ஆனால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் டெட் பண்டி, ரிச்சர்டு ரம்ரிஸ் போன்ற சீரியல் கொலைகாரர்களை விட ஜெஃப்ரே அதிகளவில் இன்றும் பேசப்பட்டு வருகிறார்.
அதற்கு காரணம், அவர் தான் செய்த கொலைகளுக்கு தான் மட்டுமே காரணம் என்று ஒப்புக் கொண்டார். மேலும், கைதான பிறகு ஜெஃப்ரே அளித்த பேட்டியை ஏராளமான மக்கள் பார்த்தனர். அதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஜெஃப்ரே அந்த பேட்டியில் மிகவும் பக்குவத்துடன், அமைதியாக அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஜெஃப்ரேயிடம் விசாரணை நடத்திய பாட் கென்னடி ஒரு பேட்டியில் அவரைப் பற்றி கூறுகையில்,
‘ஜெஃப்ரே மற்ற சீரியல் கொலைகாரர்களிடமிருந்து மாறுபட்டவர். தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட ஒரே சீரியல் கொலைகாரர் அவர் தான். அவர் எதையும் மறைக்கவில்லை. நான் அவரிடம் தொடர்ந்து ஆறு வாரங்கள் விசாரணை நடத்தினேன்.
ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் அவருடன் செலவிட்டேன். அவருடன் சேர்ந்து உணவு உண்டேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சிறையில் இருக்கும் அவருக்கு பெண்களிடம் இருந்து வந்த காதல் கடிதங்கள், அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் தான்.
அது குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். சிரித்திருக்கிறோம். அவர் உயர் வகுப்பிலிருந்து வந்த அழகான இளைஞர். ஆங்கிலத்தில் நல்ல சொல்வளம் மிக்கவர். அவர் தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
அவருக்கு சாதாரண மனிதர்களைப் போல உணர்வுகள் உள்ளன. நான் ஒருமுறை அவரிடம், ‘’ஜெஃப்ரே நீ ஏன் ஒரு காதலை நிரந்தரமாக தேடிக் கொள்ளவில்லை? ஏன் இத்தனை பேரை கொலை செய்தாய்?’’ என்று கேட்டேன்.
அதற்கு அவர், ‘அனைவரும் கடைசியில் உங்களை விட்டுச் சென்றுவிடுவார்கள் பாட்.. அதனால் நான் கொன்றவர்கள் என்னோடு கடைசிவரை இருக்க வேண்டும் என்று அவர்களை சாப்பிட்டேன்’ என தெரிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை, ஜெஃப்ரே தனிமையினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அழகான புறத்தோற்றம் கொண்ட இளைஞர்’ என தெரிவித்திருந்தார்.
ஜெஃப்ரே தன் வாழ்க்கை குறித்து அந்த பேட்டியில் கூறுகையில், ‘நான் என் கற்பனை உலகத்தை எனது நிஜ வாழ்க்கையை விட சக்தி வாய்ந்ததாக மாற்ற எண்ணினேன். நான் மனிதர்களை ஒரு பொருளாகப் பார்க்க பழகினேன்.
நான் ஒரு நோய் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தேன். சாதாரண மக்களிடம் இருக்கும் உணர்வுகள் எனக்கு இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. நான் கடைசியாக எப்போது அழுதேன் என்பதையே மறந்துவிட்டேன்.
இதில் என் பெற்றோரை குறை கூறுவது எனக்கு கோபத்தைத்தான் தருகிறது. நான் நோய் பிடித்தவன். நான் சிறையில் இருப்பதுதான் நல்லது’ என தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், 1994ஆம் ஆண்டு சக கைதியான கிறிஸ்டோபர் என்பவரால் ஜெஃப்ரே கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 33 ஆகும்.
17 கொலைகள்.....மனித மாமிசம் சாப்பிட்ட அரக்கன்..
Reviewed by Author
on
August 04, 2018
Rating:

No comments:
Post a Comment