கோழி இறைச்சி பிரியர்களுக்கு ஓர் ஆபத்தான செய்தி -
கோழி இறைச்சியின் ஊடாக அதிக நோய்கள் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தவிர்ப்பு நிலையம் இதனை அறிவித்துள்ளது.
உணவுப் பொருள்களுடன் தொடர்புடைய நோய்களைப் பொறுத்த வரையில், கோழி இறைச்சியின் மூலம் பரவும் நோய்கள் அதிகம் என குறித்த நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையம் உணவின் மூலம் பரவக் கூடிய நோய்களுக்கான காரணிகள் பற்றி ஆய்வு செய்தது.
2009ம் ஆண்டு தொடக்கம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பான தரவுகள் ஆராயப்பட்டன. இதன்போது ஐயாயிரத்து 700ற்கு மேற்பட்ட தடவைகள் உணவுப் பொருள்களால் நோய்கள் பரவியிருந்தன.
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு 145 பேர் மரணத்தைத் தழுவியிருந்தார்கள்.
இதில் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் கோழி இறைச்சியுடன் தொடர்புடைய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
கோழி இறைச்சி பிரியர்களுக்கு ஓர் ஆபத்தான செய்தி -
Reviewed by Author
on
August 07, 2018
Rating:

No comments:
Post a Comment