ஜெயலலிதாவை விட அதிக நாட்கள் தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.
குறுகிய காலங்களில் தமிழ்நாடு அப்துல்கலாம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற மூன்று பெரும் தலைவர்களை இழந்துள்ளது.
இந்நிலையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தமிழகத்தில் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்துள்ளனர் என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் கருணாநிதி தமிழக முதல்வராக 6863 நாட்களும், ஜெயலலிதா 4677 நாட்களும் இரண்டு பேரும் மொத்தமாக 11540 நாட்களாக முதல்வராக இருந்துள்ளனர்.
ஜெயலலிதாவை விட கருணாநிதி 2186 நாட்கள் அதிகமாக தமிழக முதல்வராக இருந்துள்ளார்.
இருப்பினும் 80 ஆண்டுகள் அரசியல் அனுபவங்களை கொண்டுள்ள கருணாநிதி, 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்து உலகசாதனை படைத்தவர், இப்படி உலகில் எந்த தலைவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பதவி வகித்ததில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஜெயலலிதா இறந்த 611 நாட்களில் கருணாநிதி இறந்துள்ளார்.
ஜெயலலிதாவை விட அதிக நாட்கள் தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி!
Reviewed by Author
on
August 09, 2018
Rating:

No comments:
Post a Comment