சம்பந்தனின் பதவி குறித்து மகிந்த வெளியிட்ட கருத்து! -
எதிர்க் கட்சித் தலைவர் யார்? என்பதை சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும் எனவும், அதனை இன்னுமொரு கட்சியிடம் கேட்க வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், சபாநாயகர் இதற்குத் தீர்வொன்றை வழங்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அபே கம வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “எதிர்க் கட்சித் தலைவர் யார்? என்பதை சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும். சபாநாயகருக்கு இதற்கான சக்தி இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
இதேவேளை, நான் மதுபானம் அருந்துவதில்லை. ஆகையினால் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு பிரச்சினையும் இல்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, சமகால நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தன் செயற்பட்டு வரும் நிலையில், அதனை கூட்டு எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தனின் பதவி குறித்து மகிந்த வெளியிட்ட கருத்து! -
Reviewed by Author
on
August 10, 2018
Rating:

No comments:
Post a Comment