கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? குழப்பம் ஆரம்பம்!
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
இவர் இந்த தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் கருணாநிதி. இவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவுகளால் மரணமடைந்தார்.
இதையடுத்து கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்தது.
இந்நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் என்பது திமுகவின் கெளரவப் பிரச்சினை என்பதால் வெயிட்டான வேட்பாளரை போடவோ அதிலும் குடும்ப உறுப்பினர் ஒருவரையே நிறுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி இந்திரா வென்ற ரேபரேலி மக்களவை தொகுதியில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி தொடர்ந்து போட்டியிடுகிறாரோ, ராஜீவ் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில் அவரது மகன் ராகுல் காந்தி போட்டியிடுகிறாரோ அதேபோல திருவாரூரில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை போட்டியிட வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அது போல் வெயிட்டான வேட்பாளராக திமுக தலைவர் கருணாநிதியின் கவிதை வாரிசான கனிமொழியோ அல்லது ஸ்டாலினின் அரசியல் வாரிசான உதயநிதி ஸ்டாலினோ அல்லது ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலினோ நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இவர்களில் யார் நிறுத்தப்பட்டாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றாகிவிட்டது. ஏனெனில் திருவாரூர் திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. திருவாரூர் தொகுதியில் கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1971-ஆம் ஆண்டும் 1977-ஆம் ஆண்டும் 2011-ஆம் ஆண்டும், 2016-ஆம் ஆண்டும் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
அதுபோல் திருவாரூர் தொகுதியில் 13 முறை நடந்த தேர்தல்களில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது.
திமுக தானாகவே உடையும்!! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் அழகிரி
திமுக தானாகவே உடையும் என்றும் அதை உடைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றும் மு. க. அழகிரி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி இறந்து நாளையுடன் ஒரு வாரம் ஆகவுள்ளது. இந்நிலையில் அவரது வீட்டில் தற்போது மோதல் வெடித்துள்ளது. கட்சியில் அழகிரியை சேர்க்க வேண்டும் என கோரி அவர் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசியுள்ளார்.
திமுகவில் உள்ளவர்கள் பணத்துக்கு விலை போகிறார்கள். நான் அதிருப்தியில் உள்ளதை வெளிப்படுத்தி உள்ளேன். திமுகவில் பதவிகளுக்கு பணத்துக்கு விற்கப்படுகின்றனர். நான் பொறுப்புக்கு வருவதையே கருணாநிதியின் தொண்டர்கள் விரும்புகிறார்.
தற்போதைய திமுக தலைமை சரியாக செயல்படவில்லை. அப்படி செயல்பட்டிருந்தால் எப்படி ஆர் கே நகர் தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்திருக்கும். திமுக தானாக உடையும். அதை உடைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.
நான் அப்படி செய்யவும் மாட்டேன் என்று ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அழகிரி பேட்டியளித்திருந்தார். நாளை அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அழகிரியின் பேச்சு அதிரவைக்கிறது.
கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? குழப்பம் ஆரம்பம்!
Reviewed by Author
on
August 14, 2018
Rating:

No comments:
Post a Comment