கேரள வெள்ளத்திற்கு அதிக பொருட்செலவு...விஜயகாந்துக்கு ஒரு சல்யூட்:
சினிமாவில் நடிக்க தெரிந்தவருக்கு நிஜத்தில் நடிக்க தெரியவில்லை என ஒருவரை பொதுமக்கள் பாராட்டினார்கள் என்றால் அந்த பெருமை எல்லாமே தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை மட்டுமே சாரும்.
தமிழக அரசியலில் கால்பதிக்க நீண்ட காலமாகவே போராடி வரும் விஜயகாந்த், கடந்த சில மாதங்களாகவே பெரும் கஷ்டத்தில் இருந்து வருவதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத விஜயகாந்த் இன்று வரையிலும் தொடர்ந்து பலருக்கும் உதவிகள் செய்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது, தென்மேற்கு பருவமழையால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கையையே இழந்துள்ள கேரளா மக்களுக்கு விஜயகாந்த் அதிக அளவில் பொருட்செலவு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தேமுதிக சார்பில் வழங்கப்படும். கேரளாவிற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த இன்று காலை தான் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள வெள்ளத்திற்கு அதிக பொருட்செலவு...விஜயகாந்துக்கு ஒரு சல்யூட்:
Reviewed by Author
on
August 21, 2018
Rating:

No comments:
Post a Comment