மடு பலம்பிட்டி பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் கைது-(படம்)
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு வேட்டையாடப்பட்ட சுமார் 50 கிலோ மதிப்புள்ள மான் ஒன்றையும் செவ்வாய்க்கிழமை14-08-2018 காலை மடு வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி-பறங்கியாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை14-08-2018 காலை மான் வேட்டையில் ஈடுபட்ட போதே மடு வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இதன் போது குறித்த நபரிடம் இருந்து சுமார் 50 கிலோ எடை கொண்ட வேட்டையாடப்பட்ட மானும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை மடு சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடு வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மடு பலம்பிட்டி பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் கைது-(படம்)
Reviewed by Author
on
August 15, 2018
Rating:

No comments:
Post a Comment