குடற்புண்களை குணப்படுத்தும் மணத்தக்காளியின் நன்மைகள் -
மணத்தக்காளி கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது.
மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள்
- ஒரு நாளைக்கு 5 முதல் 6 பசுமையான மணத்தக்காளி இலைகளை மென்று சாற்றை விழுங்கினால் விரைவாக வாய்புண் குணமாகும்.
- மணத்தக்காளி கீரையை தினமும் உணவுடன் சேர்த்து உண்பதினால் நம் உடலில் சீரான முறையில் செரிமானம் நடைபெறும்.
- மணத்த்க்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு அதிகம் உள்ளவர்களின் உடலில் ஏற்படும் சூட்டைக் குறைக்கும்.
- மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
- காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.
- சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில் குணமாகும்.
- மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
- புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும்.
குடற்புண்களை குணப்படுத்தும் மணத்தக்காளியின் நன்மைகள் -
Reviewed by Author
on
August 05, 2018
Rating:
No comments:
Post a Comment