முல்லைத்தீவில் காட்டு யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை -
இதனால் தாங்கள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக கூடுதலான குளங்களின் கீழ் சிறுபோக செய்கைகள் மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில், வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள தேறாங்கண்டல் குளத்தின் கீழ் 70 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேறாங்கண்டல் குளத்தின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையினை காட்டு யானைகள் புகுந்து தினமும் அழித்து நாசம் செய்வதனால் தாங்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளோம்.
வறட்சியினால் இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்தி விதை நெல் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்சிறுபோக செய்கையினை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன.
இந்த பிரதேசத்தில் தினமும் இவ்வாறு காட்டுயானையின் தாக்கம் மற்றும் ஏனைய விலங்குகளின் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
யானை வேலிகளை அமைத்து தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றபோதும், இவ்வாறு யானை வேலிகள் அமைக்கப்படவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் காட்டு யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை -
Reviewed by Author
on
August 21, 2018
Rating:

No comments:
Post a Comment