பிரபாகரனுக்கு நன்கு தெரியும் என கூறிய கலைஞர் -
விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கும் போதே இறுதியில் இந்த நிலை வரும் என பிரபாகரனுக்கு நன்கு தெரியுமென கருணாநிதி தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் கலைஞர் என அழைக்கப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ் நாட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதியின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த நிலையில் இந்திய ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கும் போதே திருமாவளவன் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐந்து நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போதே பிரபாகரன் தொடர்பிலான தன்னுடைய இந்த எண்ணத்தை கருணாநிதி வெளிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை அவர் தொடர்ந்தும் என்னிடம் இது பற்றி பகிர்கையில், கடைகோடி தமிழன் இருக்கும் வரை இந்த போராட்டத்தின் புகழ் நீடித்திருக்கும்.
பிரபாகரன் தான் கொண்ட இலட்சியத்தை கடைசி வரை உறுதி கொண்டு முடிக்கும் மனிதன். தம்பி பிரபாகரன் தொடர்பில் நான் தெரிவிப்பதை விட ரஜிவ் காந்தி சிறப்பாக கூறியிருக்கிறார் என தெரிவித்தார்.
பிரபாகரன் தொடர்பில் ரஜிவ் காந்தி கூறுகையில், தமிழினத்திற்கு மாவீரன் பிறந்திருக்கிறான் என சுட்டிக்காட்டியதை மேற்கோள் காட்டியே கருணாநிதி அந்த விடயத்தை என்னிடம் கூறினார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் ரீதியான தனது எண்ணப்பாங்கையும்,
முரண்பாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு கருணாநிதி, போராட்ட வீரர் என்ற வகையில் பிரபாகரனை மேற்குறிப்பிட்டபடி தனது எண்ணத்தில் வைத்திருந்தமை பலரையும் நெகிழ வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனுக்கு நன்கு தெரியும் என கூறிய கலைஞர் -
Reviewed by Author
on
August 09, 2018
Rating:

No comments:
Post a Comment