அண்மைய செய்திகள்

recent
-

மகாவலிக்கெதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் அறவழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.



 தமிழர் தாயகத்தை துண்டாடவும், இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (26) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மகாவலி வலயத்தினுள் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஊடாக 6 ஆயிரத்திற்கும்    அதிகமான சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு 9 சிங்கள கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட வெலி ஓயா (மணலாறு) பிரதேசசெயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

மகாவலி இது வரை காலமும் தனது செயற்பாடுகளை வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவுடன் மட்டுப்படுத்தியிருந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் கருநாட்டுக்கேணி கடற்கரையில் எட்டு சிங்கள மீனவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியதனூடாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினுள் தனது காணி அதிகாரத்தினை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும், முன்மொழியப்பட்ட மகாவலி'மு'மற்றும் 'து'வலையமூடாக வடக்கின் பெரும்பகுதி காணிஅதிகாரம் மகாவலி அதிகாரசபையின் கீழ் செல்லக்கூடிய அபாயநிலை தோன்றியுள்ள நிலையில் காணி அதிகாரங்களை பறிக்கப்பட்ட இனப்பிரச்சனை தீர்வானது உப்புச்சப்பற்றதாகவே இருக்கும்.

தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாத சிங்கள குடியேற்றங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட மகாவலிதிட்டத்தினை முழுமையாக நிராகரிக்கின்றோம்.

மேற்படி விடயம் தொடர்பாக மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(28.08.2018) அன்று நடாத்த அழைப்பு விட்டிருக்கின்ற அறவழிப்போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவைத் தெரிவிப்பதோடு இப்போராட்டத்தை கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு எம் இனியமக்கள் அனைவரையும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மகாவலிக்கெதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் அறவழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. Reviewed by Author on August 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.