வெனிசுலா ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல்:
வெனிசுலாவில் ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோ மீது ட்ரோன் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாங்கிய பல ட்ரோன் விமானங்கள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதியின் உரை பாதியிலேயே முடிக்கப்பட்டு அவரை பத்திரமாக அழைத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 7 தேசிய பாதுகாப்புப்படையினர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களது உயிருக்கு ஆபத்துண்டா என்பது குறித்த தகவல்கள் மருத்துவ அதிகாரிகள் தெரியப்படுத்துவார்கள் எனவும் ராணுவம் அறிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ ஒன்றில், ஜனாதிபதி மதுரோ பேசிக்கொண்டிருக்கிறார், திடீரென்று அவருக்கு அருகாமையில் இருக்கும் அதிகாரிகள் வானத்தை பார்க்கின்றனர், உடனே அந்த காட்சியானது குவிந்திருக்கும் ராணுவத்தினரை காட்டுகிறது, அவர்களிடையே திடீர் பரபரப்பு எழுவதையும் பதிவாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி 5.41 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகவும், துரிதமாக செயல்பட்ட ஜனாதிபதிக்கான பாதுகாப்பு வீரர்கள் குறித்த ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தை அடுத்து மதுரோ நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது.
வெனிசுலா ஜனாதிபதி மீது வெடிகுண்டு தாக்குதல்:
Reviewed by Author
on
August 05, 2018
Rating:

No comments:
Post a Comment