வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 2269 குடும்பங்கள் -
வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 2269 குடும்பங்களைச் சேர்ந்த எண்ணாயிரத்து 276 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் இஸ்மாலெப்பை முகமட் ஹனீபா தெரிவித்துள்ளார்.
குறித்த மாவட்டத்தின் வறட்சி நிலை தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்திலும் வறட்சி நிலை நீடிக்கின்றது.
இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 1309 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 446 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 474 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 1649 குடும்பங்களைச் சேர்ந்த 6047 பேரும் ஆக இரண்டாயிரத்து 269 குடும்பங்களைச் சேர்ந்த எண்ணாயிரத்து 276 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நிலையில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள நிலையத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தால் அவர்களுக்கான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, வவுனியாவில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்த போதும் கிணறுகளில் நீரை பெற முடியாத நிலை காணப்படுவதுடன், வறட்சி நிலை நீடிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 2269 குடும்பங்கள் -
Reviewed by Author
on
September 05, 2018
Rating:

No comments:
Post a Comment