இலங்கை வீரர்கள்-வெறும் கையுடன் நாடு திரும்பினர்.
இந்தோனேசியாவில் நேற்று நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை உள்ளிட்ட 9 நாடுகள் எந்தவொரு பதக்கத்தையும் பெறாமல் வெறும் கையுடன் நாடு திரும்பின.
இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், புரூணை, மாலைதீவு, ஓமான், பலஸ்தீனம், திமோர் லெஸ்தே, யேமன் ஆகிய 9 நாடுகளின் அணிகள் வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளன.
இலங்கையில் இருந்து 172 பேர் கொண்ட அணி இந்தப் போட்டிகளுக்காக சென்றிருந்தது.
பளுதூக்குல், தடகளம், வில்வித்தை, கூடைப்பந்து, கரப்பந்து, கடற்கரைக் கரப்பந்து, பூப்பந்து, குழிப்பந்து, மல்யுத்தம், ஹொக்கி, ஜூடோ, கபடி, கராத்தே, நீச்சல், ரக்பி, ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், மேசைப்பந்து, குத்துச்சண்டை, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இலங்கையில் இருந்து சென்ற வீரர்கள் பங்கேற்றனர்.
எனினும், எந்தவொரு பதக்கத்தையும் பெற்றுக் கொள்ளாமல் வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
172 வீரர்கள் போட்டிக்கு செல்லவில்லை....சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்
என்ன கொடுமை
இலங்கை வீரர்கள்-வெறும் கையுடன் நாடு திரும்பினர்.
Reviewed by Author
on
September 04, 2018
Rating:

No comments:
Post a Comment