இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் சீனா! அமெரிக்கா, ஜப்பான் எடுத்துள்ள நடவடிக்கை -
உலக சோசலிஷ இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனா முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக அதன் செல்வாக்கு மேலோங்கியுள்ளது.
இலங்கையில் சீனா பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனது. இந்த அனைத்து முதலீடுகளும் கடன் அடிப்படையிலானது. இதன் மூலம் இலங்கையில், சீனா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில், ஆதிக்கம் செலுத்த உலக வல்லரசு நாடுகள் போட்டிப்போடுகின்றன. எனினும், இதில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அண்மையில் ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இசுனோரி ஒன்டேரா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அத்துடன், அமெரிக்க யுத்தக் கப்பலும் இலங்கைக்கு வந்திருந்தது. இதன் போது, இலங்கை பாதுகாப்பு தரப்பினருடன் அமெரிக்கா கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக உலக சோசலிஷ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் சீனா! அமெரிக்கா, ஜப்பான் எடுத்துள்ள நடவடிக்கை -
Reviewed by Author
on
September 04, 2018
Rating:

No comments:
Post a Comment