புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டாமென இரா.சம்பந்தன் கேட்கக்கூடும்! சி.வி.விக்னேஸ்வரன் -
எனினும், அது எமக்கு தெரியாது எனவும், இதனை தன்னால் உறுதியாக கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“உடனடியாக புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. அது இலகுவான காரியமும் கிடையாது. இது குறித்த பேச்சுவார்த்தைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிராந்திய நிலவரங்கள் குறித்து பேசுவதற்கு இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டாம் என அவர் கேட்கக்கூடும்.
அத்துடன், தமது கட்சியுடன் இணைந்து செயற்படுமாறும் அவர் என்னிடம் வலியுறுத்த முடியும். எனினும் அது குறித்து எமக்கு உறுதியாக சொல்ல முடியாது.
இதேவேளை, சமஸ்டியைக் கோரியே நாங்கள் பதவிக்கு வந்துள்ளோம்.
சமஸ்டியைக் கோரும் நிலையில் மாற்றம் செய்வதானால், நாங்கள் மீண்டும் மக்களிடம் சென்று அவர்களின் ஆணையைப் பெற வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டாமென இரா.சம்பந்தன் கேட்கக்கூடும்! சி.வி.விக்னேஸ்வரன் -
Reviewed by Author
on
September 04, 2018
Rating:

No comments:
Post a Comment