ஒரே மாதத்தில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் -
க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை டிசம்பர் மாதத்திலேயே நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயம் தொடர்பில் அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியசம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறுகையில், க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பின் உயர் கல்வியை தொடர்வதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நிலையிலேயே இரு பரீட்சைகளையும் டிசம்பரில் நடத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை இயலுமான வரை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி எய்திய பின்னர் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக காத்திருக்கும் மாணவர்கள் இடைப்பட்ட காலத்தை பயனுள்ளதாக கழிக்க விசேட வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஒரே மாதத்தில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் -
Reviewed by Author
on
September 26, 2018
Rating:

No comments:
Post a Comment