உலகின் சிறந்த கால்பந்து வீரர் இவர்தான் -
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷிய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் செல்ல உதவிய மோட்ரிச், ரியல் மேட்ரிட் கிளப் அணி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லவும் உறுதுணையாக இருந்தார்.
சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதை முகமது சலா வென்றார். இங்கிலீஸ் ப்ரீமியர் லீக் தொடரில் எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் அடிக்கப்பட்ட கோலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பிரேசிலைச் சேர்ந்த 32 வயதான மார்டா, சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை ஆறாவது முறையாக வென்றுள்ளார்.
சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு பிரான்சை சேர்ந்த டிடியர் டெஸ்சாம்பஸ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த கோல் கீப்பருக்கான விருது பெல்ஜியம் அணியின் திபாட் கோர்ட்டுவா-வுக்கு வழங்கப்பட்டது

உலகின் சிறந்த கால்பந்து வீரர் இவர்தான் -
Reviewed by Author
on
September 26, 2018
Rating:
No comments:
Post a Comment