ஒரே வாரத்தில் கண் பார்வையை தெளிவாக்க இதை மட்டும் செய்யுங்க!
எனவே ஆரம்பத்திலேயே கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு, கண் பார்வையை மேம்படுத்த செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளை தெரிந்து கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை
- காட் லிவர் ஆயில், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெண்ணெய், பப்பாளி, ப்ளூபெர்ரி, ஆப்ரிகாட் மற்றும் திராட்சை போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.
- பசலைக்கீரை, சிறு கீரை, அரைக்கீரை போன்றவற்றால் வாரத்திற்கு 2-3 முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- தினமும் அதிகம் நீர் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் கண்கள் வறட்சி அடையாமல், சோர்வடையாமல் மற்றும் மங்கலாக தெரியாமல் இருக்கும்.
- கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.

- கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை குறைந்தது 20 நொடிகள் 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பாருங்கள்.
- பில்பெர்ரி பழத்தில் உள்ள அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் எனவே இதனை தினமும் உண்ணலாம்.
- பொன்னாங்கண்ணிக் கீரையை கூட்டு, பொரியல், துவையல் என 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவருவது பார்வைத் திறனை மட்டுமல்ல, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
செய்ய கூடாதவை
- ஒரே வேலையில் நீண்ட நேரம் ஈடுபடாமல் 5-10 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
- புகைப்பழக்கம் இருந்தால் வயதான காலத்தில் மாகுலர் திசு சிதைவு நோய், கண் புரை மற்றும் கண் நரம்பு பாதிப்பு போன்ற பிரச்சனைகள் கட்டாயம் வரும்.
- சர்க்கரை உணவுகள் கண்களுக்கு மிகவும் மோசமானது. எவ்வளவுக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கண் பார்வை மோசமாகும்.
- முகத்தை அடிக்கடி நீரில் கழுவ மட்டும் செய்யாதீர்கள். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போது வாயில் நீரை நிரப்பி, பின் கண்களைத் திறந்து நீரைத் துப்புங்கள்.
- நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைலைப் பார்க்காதீர்கள். மேலும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் திரையின் வெளிச்சத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

ஒரே வாரத்தில் கண் பார்வையை தெளிவாக்க இதை மட்டும் செய்யுங்க!
Reviewed by Author
on
September 25, 2018
Rating:
No comments:
Post a Comment