மன்னார் கல்வி வலயத்தின் முழு நிலாக் கலை விழா-படங்கள்
மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சுகந்தி செபஸ்தியன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன்இவர்களுடன் அருட்தந்தையர்கள் அரசாதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தலைமை உரையில் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் சாதனைகளுக்கு முக்கியமாக அமைகின்றது எளிமையும், தன்னடக்கமும், தங்களுக்குள்ளே வழி காட்டியாகக் கொண்டு நாங்கள் எந்த நேரத்திலும் எந்த வேளையிலும் தடுமாறவும் மாட்டோம், தடம் மாறவும் மாட்டோம் என்ற அந்த உயரிய சிந்தனையுடன் ஒவ்வொறு பாடசாலைகளையும் ஆசிரியர் , அதிபர்களாகிய நீங்கள் வழிநடத்தி வந்துள்ளீர்கள் என மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சுகந்தி செபஸ்தியன் தெரிவித்துள்ளார்.
பிரதம விருந்தினர் உரையில்,
முன்னைய காலங்களில் இருந்த கலை நிகழ்வுகள் அருகிக் கொண்டு செல்கின்ற நிலையில் கலை நிகழ்வுகளை அடுத்த பரம்பரைக்கு கடத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த புரட்டாதி முழு நிலாக் கலைவிழாவானது நடாத்தப்படுகின்றது.
எனினும் இம் முறை எனது ஓய்வு பெறும் காலத்தில் இறுதி கலை விழாவாக இன்றைய புரட்டாதி முழு நிலாக் கலைவிழா மன்னாரில் இடம் பெறுகின்றது.
ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்ற புரட்டாதி முழு நிலாக் கலைவிழா நிகழ்வானது எனது தலைமையிலே கூட்டம் நடாத்தப்பட்டு இடம்பெறுவது வழமை.
ஆனால் இம்முறை எனது தலைமை இல்லாமல் மன்னார் வலயக்கல்வி பணிமனை அலுவலகர்கள் நீங்கள் உணர்ந்து நல்ல முறையில் இவ் விழாவை சிறப்பாக நடாத்தியுள்ளீர்கள். அதற்கு நான் தனிப்பட்ட பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
கலை நிகழ்வில் கலைகலாசார நிகழ்வுகள் பாடசாலை மாணவர்களினாலும் ஆசீரியர்களினாலும் மிகவும் சிறப்பாகபல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, இதன்போது மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்து மக்கள் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் கல்வி வலயத்தின் முழு நிலாக் கலை விழா-படங்கள்
Reviewed by Author
on
September 25, 2018
Rating:

No comments:
Post a Comment