முருங்கன் P S C விளையாட்டு கழகத்தின் 60 ஆண்டு பூர்த்தி-கில்லறி அணிக்கு வெற்றிக்கிண்ணம்-படங்கள்
மன்னார்முருங்கன் P S C விளையாட்டு கழகத்தின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனமும் இணைந்து கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற மன்னார் மாவட் உதைபந்தாட்ட அணிகள் பங்கு பற்றிய போட்டியின் இறுதிப்போட்டி 24.09.2018 இன்றையதினம் மாலை 3.00 மணிக்கு முருங்கன் பொது விளையாட்டு மைதானத்தில்
நடைபெற்றது.
இன் நிகழ்வில்.பிரதம விருந்தினராக
கௌரவ .சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி கலந்து கொன்டார்.
ஐக்கிய விளையாட்டு கழகம் விடத்தல்தீவு.
கில்லறி விளையாட்டு கழகம் சாவட்கட்டு ஆகிய இரு அணிகளும் இறுதி போட்டிக்கு தெரிவாகின.
இறுதி போட்டியில் அவர்களக்கான நேரத்தில்.இரு அணிகளும் கோல்கள் போடாத நிலையில்.நேரம் முடிவுக்கு வந்தது.பின்னர் தன்ட உதை வளக்கப்பட்டது.
கில்லறி அணி .2 கோல்களையும்.ஐக்கிய விளையாட்டு கழகம் 1கோலையும் போட்டு.தெடரின் வெற்றி பெற்றஅணியாக கில்லறி அணி தெரிவு செய்யப்பட்டது.வெற்றியீட்டிய அணிக்கு வெற்றி கேடயமும்.பணபரிசில்களும் வழங்கி வைக்கபட்டது.

முருங்கன் P S C விளையாட்டு கழகத்தின் 60 ஆண்டு பூர்த்தி-கில்லறி அணிக்கு வெற்றிக்கிண்ணம்-படங்கள்
Reviewed by Author
on
September 25, 2018
Rating:

No comments:
Post a Comment