வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் -
மேலும் இத்தகைய மாவிலை தோரணத்தை சனிக்கிழமை தோறும் வீடுகளில் கட்டி வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.
மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?
- காற்றின் மூலம் பரவும் நோய்க்கிருமிகளிலிருந்தும் பக்டீரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.
- மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்கலத்தையும் குறிப்பதாகும். கோயில்கள் மற்றும் வீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர்.
- சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
- மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
ஏன் சனிக்கிழமையில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்?
- மயனுக்குப் பிடித்தது மாமரம். மா மரத்தின் பதினொறு இலையை வளர்பிறையில் சனிக்கிழமை அன்று கட்ட வேண்டும். இந்த சனிக்கிழமை கட்டினால் அடுத்த சனிக்கிழமை கழட்டிவிட வேண்டும். இப்படி ஒரு ஆண்டுக்கு கட்டினால் 100 வருடம் வரை அந்த வீட்டுக்கு உயிர் உண்டாகிவிடும்.
- அதிகமாக கஷ்டம் இருந்தால் 108 இலையை அதே போல் ஒரு ஆண்டுக்கு கட்டிவர கஷ்டம் அகன்று நன்மை உண்டாகும். ஆகையால் மங்களகரமாக இருக்க மா இலையை கட்டி வருகிறார்கள்.

வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் -
Reviewed by Author
on
September 12, 2018
Rating:
No comments:
Post a Comment