மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் மனோகணேசனின் அபிவிருத்தி திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு
மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் மனோகணேசனின் அபிவிருத்தி திட்டங்களின் தேசிய நல்லிணக்கம் சகவாழ்வு அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்க படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் தொடர்பான மக்கள் சந்திப்பு மற்றும் ஆரம்ப நிகழ்வு மன்னார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் அமைச்சர் மனோகணேசனின் தேசிய அமைப்பாளர் விநாயக மூர்த்தி ஜனகன், மற்றும் வன்னி இணைப்பாளர் விமல் மன்னார் மாவட்ட தேசிய நல்லிணக்க அமைச்சின் இணைப்பாளர்களான நாகரூபன் ஞானப்பிரகாசம் மரியசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதோடு மடு பிரதேச செயலக பிரிவை சேர்ந்த சில கிராமங்களின் உட் கட்டுமான அபிவிருத்திக்கு 6 மில்லியன் முதல் கட்டமாக ஒதுக்க பட்டு குறித்த வேலைகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் 03-09-2018 இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் மனோகணேசனின் அபிவிருத்தி திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு
Reviewed by Author
on
September 04, 2018
Rating:

No comments:
Post a Comment