மன்னார் நகரத்தின் அபிவிருத்தியில் எம்மோடு இணைய மறுக்கும்-நகரசபை தலைவர் நிர்வாகம்-ஹஜ் விழாவில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்
எமது பயணத்தின் போது நாம் பல குழப்பங்களையும் இன்னல்களையும் துன்பங்களையும் புத்திசாதுரியத்துடன் சமாளித்து எதிர்கொண்டுதான் இந்த சிறிய அழகிய நாட்டிலே மன்னார் மண்ணிலே பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்.
இருந்தாலும் எமது மன்னார் மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் மிகவும் முக்கிய பிரச்சினையாக காணிப்பிரச்சினை வீட்டுப்பிரச்சினைகள் தான் அதிக முறைப்பாடுகள் மக்களிடம் இருந்து வந்துள்ளது.
- தொல்லியல் பிரிவினர் ஒருபகுதி காணியினையும்
- கடற்கரையோர படையினரும் பொலிசாரும் ஒரு பகுதியினையும்
- இடம்பெயர்வுகளுக்கு பின் அடுத்தவர்களாலும் அபிவிருத்திக்காகவும் எடுக்கப்பட்ட காணிகள் இவ்வாறு பல பிரச்சினைகள் மக்களுக்கு இருக்கின்றபோதும் நாம் இருக்கின்ற வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்தி உச்ச நலனை அடையவேண்டும் அடைந்திருக்கிறோம்.
இங்கு விழா நடைபெறுகின்ற அல் பதா மைதானத்தின் வரலாறு யாவருக்கும் தெரியும் இந்தமைதானத்தினை நவீன மயப்படுத்தல் செய்வதற்கான UDA அதிகாரகளினால் அளவிடப்பட்டுள்ளது. அத்துடன் மன்னார் மண்ணில் உள்ள ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு மைதானங்களை அமைத்துக்கொண்டுள்ளோம் குறிப்பாக நானாட்டானில் மாவட்ட மைதானத்திற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றதுடன் பள்ளிமுனை மைதானமும் அத்தோடு மாந்தை முசலி போன்ற பகுதிகளிலும் அபிவிருத்தி செயற்பாடுகளும் நடைபெறுகின்றது இவ்வாறிருக்க நகரப்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட மைதானங்கள் இருப்பது எமது வீரர்களின் திறமைக்கு வெளிப்பாடாகும்.
எமது கிராமத்தின் பாடசாலையான மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மூலம் நல்ல கல்விச்சமூகத்தினை கொண்டுள்ளோம் அத்துடன் எமது கலாச்சாரத்தினை நாம் பேணிப்பாதுகாக்க வேண்டும். இணங்களுக்கிடையே முரண்பாடுகளை தவிர்க்கவேண்டும். ஏன் எனில் எமது இஸ்லாமிய மார்க்கம் அன்பு நல்பண்பு ஒழுக்கவிழுமியங்களை கொண்டுள்ளது. அதன் படியே வாழவேண்டும்.
கடந்த 7வருடங்களுக்கு முன்பு நாம் மன்னார் நகரத்தினை அபிவிருத்தி செய்யமுனைந்த போது அன்றிருந்த நகரசபைத்தலைவரும் நிர்வாகமும் எம்முடன் கருத்து முரண்பட்டு கொண்டது எந்தவிதமான அபிவிருத்தியும் செய்ய முடியவில்லை அது போல இன்றுள்ள நகரசபைத்தலைவர் நிர்வாகமும் இன்று 02-09-20185 UDA அதிகாரிகள் சென்று பார்வை அளவையினை மேற்கொள்ள முனைந்தபோது தற்போதைய நகரசபைத்தலைவர் எங்களுக்கு
- மன்னார் புதிய மீன் சந்தையும் தேவையில்லை
- மன்னார் புதிய கட்டிடத்தொகுதியும் தேவையில்லை
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் நாம் கணிசமான வாக்கு வித்தியாசத்தில்தான் நகரசபையினை அவர்களின் கைகளுக்கு சென்றது. இருந்தாலும் மூன்று மத மக்களும் எமக்கு வாக்களித்துள்ளனர் அதனால்தான் மன்னார் பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு சபைகளையும் மற்ற இடங்களில் சில இடங்களையும் பெற்றுள்ளோம்.
இனிவரும் 04 வருடங்களுக்குள் நாம் வென்ற பிரதேச சபைகளின் அபிவிருத்தியினையும் மக்களின் விருப்பத்தினையும் நிறைவேற்ற எண்ணியுள்ளோம் அதே போல தான் மன்னார் நகரத்தினையும் அபிவிருத்தி செய்ய பெரும் விருப்பம் கொண்டு ஆசையாக முன்வந்தால் அந்த ஆசையை நிராசையாக்கும் அளவிற்கு தற்போதைய நிர்வாகம் உள்ளது.
அரசியல் வாதிகளும் அரசியல் கட்சிகளும் தேர்தல் காலங்களில் மட்டும்தான் அரசியல் செய்ய வேண்டும் தேர்தல் முடிந்த பின்பு அரசியல் பேதங்களுக்கு அப்பால் இனமத பேதங்களுக்கு அப்பால் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட்டால் தான் நாம் எமது மக்களின் மன்னாரின் நலனையும் நன்மைகளையும் பெற ஒன்றிணைவேண்டும். எதிர் காலங்களிலாவது மன்னார் நகரசபையின் தலைவர் மற்றும் நிர்வாகம் எம்மோடு இணைந்து செயலாற்ற வேண்டும் என அன்பாகவேண்டுகோள் விடுக்கின்றேன்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்னார் நகரத்தின் அபிவிருத்தியில் எம்மோடு இணைய மறுக்கும்-நகரசபை தலைவர் நிர்வாகம்-ஹஜ் விழாவில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்
Reviewed by Author
on
September 04, 2018
Rating:

No comments:
Post a Comment