மன்னார் பெரியமடுப்பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம்-மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆ.சந்தியோகு
மன்னார் பெரியமடு கிராமங்களில் உள்ள வீட்டுக்காணிகளுக்குள் காட்டுயானைகள் புகுந்து தோட்டப்பயிர்கள் தென்னை வாழை பலா போன்ற ஜீவனோபாய வருமானங்கள் தரும் மரங்களை முறித்து துவம்சம் செய்து விட்டது
என்பதை அறிந்த மாந்தை மேற்கு தவிசாளர் சந்தியோகு அவர்கள் 23-08-2018 பெரியமடுப்பகுதிக்கு சென்று தென்னை வாழை மற்றும் தோட்டங்களையும் பார்வையிட்டார் இதன் போது பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் கருத்துத் தெரிவித்த மக்கள் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ள தென்னை மரம் உட்பட எமக்கு சிறு வருமானம் தரும் மரங்களுக்கு வீட்டுக்காணிகளுக்குள்ளோ அல்லது அருகிலோ நீர் இருக்கவில்லை தூரங்களில் இருந்து தோளில் நீர் சுமந்துவந்து உருவாக்கிய மரங்கள் மற்றும் பயிர்கள் அழிக்கப்பட்டு கிடக்கிறது.
பெரியமடு பப்பாளிக்கும் மிளகாய்க்கும் கொழும்பு சந்தைகளில் நல்ல மதிப்பு உண்டு யானைகளால் பயிர்கள் சேதப்படுவது நெடுநாட்களாக தொடர்ந்தபடி இருக்கினறது இரவு நேரங்களில் குழந்தைகளுடன் வீட்டில் தங்கி இருக்கவும் பயமாக உள்ளது காட்டு யானைகளுக்கான வேலிகளை அமைத்து தரும்படி அதிகாரிகளுக்கு பல தடவை அறிவித்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கவலையுடன் தெரிவித்தனர்.
மன்னார் பெரியமடுப்பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம்-மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆ.சந்தியோகு
Reviewed by Author
on
September 25, 2018
Rating:
No comments:
Post a Comment