வடக்கு, கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – மீண்டும் ஆரம்பம்
வடக்கு- கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் உள்ள இயற்கை எரிவாயும் மற்றும் எண்ணெய் வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமான Schulumberger என்ற நிறுவனமே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்த ஆய்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த ஆய்வுக்காக, பனாமா நாட்டுக் கொடியுடன் BGP-Pioneer என்ற கப்பல் கொழும்பு வந்துள்ளது.
இந்தக் கப்பல் வடக்கு, கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் 45 நாட்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு தரவுகளை சேகரிக்கும்.
10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் இந்தக் கப்பல் தரவுகளைச் சேகரித்து, அதனை மலேசியாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கும்.
அங்கு பகுப்பாய்வு செய்யப்படும் தரவுகளின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயாரிக்கப்படும்.
கிழக்குப் பகுதியில் உள்ள ஜேஎஸ்-5, ஜேஎஸ்- 6 துண்டங்களில் முதலில் மேற்கொள்ளப்படும் இந்த எண்ணெய்வள ஆய்வு, பின்னர், காவேரி மற்றும் மன்னார் படுக்கைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
வடக்கு, கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – மீண்டும் ஆரம்பம்
Reviewed by Author
on
September 03, 2018
Rating:

No comments:
Post a Comment