தமிழகம் தான் காரணம்! கேரளாவின் முகத்திரையை கிழித்த அறிக்கை -
இந்நிலையில் கேரளா வெள்ளம் தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்திய மத்திய நீர்வள கமிஷன், நீர்வளத்துறை அமைச்சகத்திடம் கடந்த வாரம் அறிக்கை அளித்தது.
அதில், கேரளாவில் ஆகஸ்ட் 15 முதல் 17 வரையிலான 3 நாட்களில் 423.78 டிஎம்சி (12 பில்லியன் கியூபிக் மீட்டர்) மழை பெய்துள்ளது. அதாவது, 1 பில்லியன் கியூபிக் மீட்டர் என்பது 35 டிஎம்சி ஆகும்.
12 பில்லியன் கியூபிக் மீட்டர் என்பது 423.78 டிஎம்சி.,யாகும். மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93 டிஎம்சி.,யாகும். கேரளாவில் பெய்துள்ள மழை 4 மேட்டூர் அணை கொள்ளளவுக்கு சமமான அளவாகும்.
கேரளாவின் அனைத்து நீர்நிலைகளின் கொள்ளளவு 5.8 பில்லியன் கியூபிக் மீட்டர் மட்டுமே. தற்போது பெய்து மழை அளவு இதில் இருமடங்காகும். அணை பாதுகாப்பு விதிகளின், குறிப்பிட்ட அளவு மட்டுமே நீர் இருப்பு வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட அளவு காலியாகவோ அல்லது குறைவாகவோ வைக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறி கேரளாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும், ஜூன் - ஜூலை மாதங்களில் மழை துவங்குவதற்கு முன்பே 200 சதவீதம் கூடுதல் நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட்டில் பெய்த கனமழையால் நீரை சேகரிக்கவோ, அணையின் நீர்மட்டத்தை குறைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் ஏதும் வெளியேற்றப்படவில்லை.
மிகவும் கட்டுப்பாடான முறையிலேயே நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.
அணை பாதுகாப்பு விதிகளை கேரளா மாற்றி அமைத்திருந்தாலே இத்தகைய பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தை தவிர்த்திருக்கலாம். அணைகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அனைத்து மத்திய அரசு ஏஜென்சிகள் மூலமும், நீர் மேலாண்மை கழக நிபுணர்கள் மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பொதுவாக மழைக்காலத்தில் பெய்ய வேண்டிய 2.19 பில்லியன் கியூபிக் மீட்டருக்கு பதிலாக 12 பில்லியன் கியூபிக் மீட்டர் மழை பெய்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தான் காரணம்! கேரளாவின் முகத்திரையை கிழித்த அறிக்கை -
Reviewed by Author
on
September 11, 2018
Rating:

No comments:
Post a Comment