அண்மைய செய்திகள்

recent
-

டிரம்பை விளாசிய பாலஸ்தீன ஜனாதிபதி - எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல!


பாலஸ்தீனத்தை சூறையாட நினைக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறாது என ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில், அந்நாட்டு ஜனாதிபதி முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபைக் கூட்டம் அமெரிக்காவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘எந்த நாட்டின் சட்டத் திட்டங்களையும் மதிக்காமல் இஸ்ரேல் மனம்போன போக்கில் செயல்படுகிறது. டிரம்ப் தரும் ஆதரவால் இஸ்ரேல் தொடர்ந்து தனது இனவாத செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
ஐ.நா-வின் எந்த ஒரு விதிமுறைகளையும் இஸ்ரேலும், அமெரிக்காவும் கடைபிடிப்பதில்லை. அமெரிக்காவை நாங்கள் தற்போது புதிய கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்.

அமைதி முயற்சியில் இனிமேலும் அமெரிக்க மத்தியஸ்த நாடாக இருக்க முடியாது. எங்களின் நண்பனாக இருக்க முடியாது. பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா முயற்சியில் நடக்கும் நலத்திட்டங்களுக்கு இனிமேல் நிதியுதவி அளிக்கப்போவதில்லை என டிரம்ப் நிர்வாகம் மிரட்டுகிறது.
எங்கள் நாடு என்றும் விற்பனைக்கு அல்ல. நாங்கள் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகளை மேற்கொள்வோம்.

1949ஆம் ஆண்டில் ஐ.நா உருவானது முதல் பாலஸ்தீன பகுதியில் அமைதியை ஏற்படுத்த இதுவரை 700 ஒப்பந்தங்களையும், உடன்பாட்டையும் மேற்கொண்டுள்ளோம். ஆனால் எதையுமே இஸ்ரேலும், அமெரிக்காவும் மதிப்பதில்லை’ என தெரிவித்துள்ளார்.

டிரம்பை விளாசிய பாலஸ்தீன ஜனாதிபதி - எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல! Reviewed by Author on September 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.