ராஜீவ் கொலை தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தரும் உண்மைகள் -
ராஜீவ் காந்தியின் உடம்பிலிருந்த கைக்குண்டு வெடித்ததாலேயே 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 7 தமிழர்களையும் ஆளுநரின் ஒப்புதலோடு விடுதலை செய்யலாம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இந்த நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பினை அந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மேற்குறிப்பிட்ட தகவல் அடங்கிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த காணொளியில்,
இரண்டு வெற்று கண்ணாடி போத்தல்களை எடுத்து ஒன்றில் பட்டாசினை வையுங்கள். மற்றைய போத்தலை பட்டாசு வைக்கப்பட்ட போத்தலின் அருகில் வையுங்கள். போத்தலினுள் வைக்கப்பட்ட பட்டாசிற்கு தீ வைத்தால் எந்த போத்தல் வெடித்து சிதறும்?
இது ஒரு சாதாரண தத்துவமாகும். அதேபோல் ரஜீவ் காந்தியின் உடம்பிலிருந்த குண்டு வெடித்ததாலேயே 24 பேர் உயிரிழந்தார்கள். மாறாக தனுவின் உடம்பிலிருந்த குண்டு வெடித்ததால் அல்ல. தனுவின் உடம்பில் குண்டு இருந்திருந்தால் அவளின் உடம்பு துண்டு துண்டாக சிதறியிருக்கும்.
இந்த விடயம் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்படுவதற்கு முன்னரே ஈழப்புலிகள் வந்தார்கள். வெடி குண்டை கட்டினார்கள். குனிந்து வெடிகுண்டை இயக்கினார்கள். அது வெடித்தது என கூறப்பட்டது.
எனினும் இந்த சம்பவத்தை நேரில் கண்டதாக தெரிவித்தவர்கள், சத்தம் கேட்டவுடன் அண்ணார்ந்து பார்த்ததும் கறுநிற புகைமூட்டம் மாத்திரமே தெரிந்தது என விவரித்திருந்தார்கள். அப்படியாயின் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை.
என்ன நடந்தது என்றால்! இந்திராகாந்தியின் மரணத்திற்கு பின்னர் யாருக்கும் அவ்வாறான மரணம் ஏற்படக்கூடாது என்பதை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் கமிசனொன்று போடப்பட்டது.
குறித்த கமிசன் ஆராய்ச்சி செய்து அறிக்கையில், இந்திராகாந்தி அக்பர் தெருவினை கடக்கும் போது சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். எதிர்தரப்பிலிருந்து இந்திராகாந்தி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் துப்பாகியை இயக்க 17 நொடிகள் ஆகியுள்ளன.
அந்த 17 நொடிகளுக்குள் இந்திராகாந்தி ஏதாவதொரு ஆயுதத்தை கொண்டு குறித்த நபரை தாக்கியிருந்தால் தப்பித்திருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை இராணுவத்தினரும் ஒப்புக்கொள்கிறார்கள். இதன்பின்னரே இந்திராகாந்தியின் பின்பு ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்திக்கு நவீனப்படுத்தப்பட்ட கைக்குண்டொன்று 14 நொடிகளில் செயறப்டுத்தக் கூடிய) தற்காப்புக்காக இடுப்பில் சொருகப்பட்டிருந்தது. இதனை இந்திய அரசும் மறுக்க முடியாது. உளவுப்பிரிவும் மறுக்க முடியாது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த குண்டு காலாவதியாகியோ அல்லது தவறுதலாகவோ வெடித்தாலேயே ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தான் உண்மை.
ராஜீவ் காந்திக்கு தான் இடுப்பிலிருந்து மேல் பகுதி முழுவதும் வெடித்து சிதறியிருந்தது. தனுவின் உடம்பு நன்றாக தான் இருந்தது. கழுத்துப் பகுதி மாத்திரமே சேதமடைந்திருந்தது.
அவளுடைய உடம்பு கல்கத்தாவில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனின் ராஜீவ் காந்தியின் உடம்பும் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தால் தான் வழக்கின் உண்மைத்தன்மையை நிரூபிக்க முடியும்.
அவசர அவசரமாக ராஜீவ் காந்தியின் உடலை எரித்தது அவர் தான் கொலையாளி என்பதை மறைப்பதற்காக என காணொளியில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயமானது உண்மையாக இருக்கலாமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த காணொளி பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜீவ் கொலை தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தரும் உண்மைகள் -
Reviewed by Author
on
September 29, 2018
Rating:
Reviewed by Author
on
September 29, 2018
Rating:


No comments:
Post a Comment