அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நாவில் இலங்கை மீது கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள சிறீதரன் எம்.பி -


இலங்கை தீவில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் போர் முடிந்து சுமார் 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அந்த பகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் என்பனவற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்தவும், புனரமைக்கவும் தொழிநுட்ப உதவிகள் அவசியம். இவ்வாறு போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் அடங்கியுள்ளன.
போர் முடிந்து சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னரும், காரணங்களின் ஊடான வலுவான இராணுவ முன்னிலைகளை ஏற்படுத்தக் கூடிய வழிவகைகளை தவிர, இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே, வரலாற்று ரீதியான தமிழ் பிராந்தியங்களில் இராணுவ ரீதியலான இராணுவ பிரசன்னத்திற்கு உதவும் வகையில் இலங்கையின் தொழிநுட்ப உதவியும் திறனும் கட்டியெழுப்பப்படலாம்.

இலங்கையில் உள்ள ஒற்றையாட்சி முறை மற்றும் தொடரும் இராணுவ பிரசன்னம் என்பன தமிழர்களின் வரலாற்று தாயக பிரதேசங்களில் தமிழர்களின் தேசியத்தையும் அவர்களின் தாயகத்தின் சுயநிர்ணய உரிமைகளையும் மறுக்கின்றன.
இந்த நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் விசேட செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கையின் இனப்படுகொலை அரசியலில் இருந்து தமது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஊக்குவிக்கப்பட வேண்டும்.

வட மாகாணசபை அங்கீகரித்தை போன்று சுயநிர்ணய உரிமைகளுக்காகவும், தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காகவும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான உந்துதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன், இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் பாதுகாப்பை மனித உரிமை பேரவை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மக்களின் உரிமைகளை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு நிதி ரீதியான ஆதரவுகளை நாடுகள் வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், Stephen Timms MP உடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவில் இலங்கை மீது கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள சிறீதரன் எம்.பி - Reviewed by Author on September 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.