100ஆண்டுகளில் இல்லாத புதிய வரலாற்று சாதனையை படைத்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்!
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் 2017-18 காலாண்டில், 6 போட்டிகளில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அவரது பந்துவீச்சு சராசரி 11.87 ஆகும்.
எந்தவொரு பந்துவீச்சாளரும் ஒரு சீசனில் 30-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், 15-க்கும் குறைவான பந்துவீச்சு சராசரியையும் வைத்திருக்கவில்லை. எனவே, ஹோல்டர் நூறு ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு, கடந்த 2003ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், 30க்கும் அதிகமான விக்கெட்டுகள் மற்றும் 12.36 சராசரியையும் வைத்திருந்தார்.
தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக இருக்கும் ஜேசன் ஹோல்டர், மேலும் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்திய மண்ணில் 24 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர்.
கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒரே கால ஆண்டில் நான்கு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் ஹோல்டர் ஆவார்.
அத்துடன் கடந்த 10 ஆண்டுகளில், 5 விக்கெட்டுகளை நான்கு முறை ஒரே கால ஆண்டில் வீழ்த்திய 7வது அணித்தலைவர் என்ற பெருமையை ஹோல்டர் பெற்றுள்ளார்.
இந்தியாவில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது கேப்டன்-பந்துவீச்சாளர் ஹோல்டர் ஆவார்.


100ஆண்டுகளில் இல்லாத புதிய வரலாற்று சாதனையை படைத்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்!
Reviewed by Author
on
October 15, 2018
Rating:
No comments:
Post a Comment