சண்டகோழி 2 படத்தின் உண்மையான வசூல் நிலவரம் இதுதான்!
விஷால், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள சண்டகோழி 2 படம் கடந்த அக்டோபர் 19 ம் தேதி வெளியானது. சண்டகோழி படத்தை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அடுத்த பாகமாக படம் வெளியானது.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தது. ஆனால் இப்படத்தின் வசூல் நல்ல முறையில் தான் இருந்து வருகிறது.ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தெலுங்கில் இப்படம் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் இப்படம் சுமார் 9 கோடி வசூலித்துள்ளதாம். அதிலும் ரூ 5 கோடியை பங்கு தொகையாக பெற்றுள்ளதாம். இதனால் படத்தை வாங்கியவர்களுக்கு நிச்சயம் லாபம் தான் என சொல்லப்படுகிறது.
விஷாலின் மார்க்கெட் தெலுங்கிலும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சண்டகோழி 2 படத்தின் உண்மையான வசூல் நிலவரம் இதுதான்!
Reviewed by Author
on
October 23, 2018
Rating:

No comments:
Post a Comment