நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்
அத்தகைய நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழிகள் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்தல் ஆகும்.
நுரையீரலை சிறப்பதாக செயல்பட வைக்கும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி பார்ப்போம்.
பூண்டு
பூண்டில் உடலுக்கு நன்மை தரும் ஃபைட்டோநியூண்ட்ரியண்ட்டான அல்சின் உள்ளது. மேலும் இதனை தினமும் உணவில் இரண்டு முதல் மூன்று பல் பூண்டை சேர்த்து கொண்டு வந்தால் நுரையீரல் தோற்று மற்றும் நுரையீரல் நோயிருந்து பாதுகாக்கலாம்.மேலும் சுவாசக்கோளாறு மற்றும் நுரையீரல் புற்றுநோய் இருக்கும் நோயாளியின் தினமும் பூண்டு சாப்பிடுவதால் அவர்களின் உடலில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
கீரை வகைகள்
அதிக சாத்துக்களை கொண்ட கீரைகளில் இருக்கும் ஃபைட்டோகெமிக்கல் ஆக்சிஜனேற்ற சேதம், நுரையீரல் வீக்கம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு பாதுகாக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.மேலும் தினமும் உணவில் ஒரு கப் கீரை சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இஞ்சி
இஞ்சி ஆஸ்துமா, சளி, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் குணமுடையது. மேலும் நுரையீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள இஞ்சியை நசுக்கி அதனை சுடுநீரில் போட்டு குடிப்பது அதில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும்.மீன்கள்
கொழுப்பு அதிகம் நிறைந்த மீன்களான சால்மன், மேக்ரல் போன்ற மீன்களில் ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ளதால் அதனை எந்த அளவில் உணவில்சேர்த்துக்கொளள்கிர்றோமோ அந்த அளவிற்கு உடலுக்கு நன்மையை தரும்.
அப்ரிகாட்
அப்ரிகாட் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் இவை நுரையீரலை பாதுகாப்பதோடு புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்பட உதவுகிறது.மஞ்சள்
மஞ்சளில் உள்ள கர்குமின் என்ற சேர்மம் அழற்சியில் இருந்து விடுபடவும், ஆஸ்துமாவால் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. இந்த உணவு பொருட்களை உங்களின் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான நுரையீரலை பெற்றிடலாம்.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி இதில் வைட்டமின் சி, கரோடேனாய்டு, போலேட்மற்றும் பைடோ கெமிக்கல் அதிகமாக இருப்தால். நுரையீரலில் ஏற்படும் சேதாரத்தை தடுக்கிறது. மேலும் இதில் எல்-சல்போராஃபேன் அடங்கியுள்ளதால், சுவாசப்பிரச்சனைகளை தடுக்கும் வகையில், அழற்சியை எதிர்க்கும் ஜீன்களை ஏற்படுத்துகின்றன.அவோகேடா
அவோகேடாவில் வைட்டமின் கே, ஈ, பி6, ரிபோவின், பேன்டோதெனிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ஆர்திரிடிஸ், நுரையீரல் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளை குணமாக்கும்.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்
Reviewed by Author
on
October 23, 2018
Rating:
No comments:
Post a Comment