பிரித்தானியாவுக்கு 40 எச்சரிக்கைகள்: வானிலை நிலவரம் -
கால்லம் புயலின் தாக்கம் தொடர்வதால் இன்றும் பிரித்தானியாவை மழை துவம்சம் செய்ய உள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு பெரு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தெற்கு இங்கிலாந்து மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது, தொலைதூர வடமேற்கு பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்யலாம்.
கடந்த வார இறுதியில் கால்லம் புயல் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தையடுத்து இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வேல்ஸின் சில பகுதிகளில் மோசமான வெள்ளம் ஏற்பட்டதால் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் தவிர்ப்பதற்காக விவசாயிகள் போராட வேண்டியிருந்தது.
இதற்கிடையில் Crickhowell பகுதியில் வெள்ளம் வடிந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Libanus என்னும் கிராமத்தில் 198 மில்லிமீற்றர் அளவிற்கு மழை பொழிந்தது. மேற்கு வேல்ஸில் Towy மற்றும் Teifi நதிகளின் கரை உடைந்ததால் கிராமங்களுக்குள்ளும் நகரங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
கார்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்களைச் சுற்றி வெள்ளம் பெருகியுள்ளதால், Carmarthenஇல் குடியிருப்போரை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் வெள்ளத்தை தடுப்பதற்காக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன.
நேற்றையதினம் கால்லம் புயல் கிழக்கு நோக்கி நகர்ந்ததால் தென் கிழக்கு பகுதிகளில் கன மழை ஏற்பட்டது.
இதற்கிடையில் வானிலை முன்னறிவிப்பாளர் ஒருவர் தெற்கு பகுதியில் ஆங்காங்கே மழை பெய்யலாம் என்றும் வேல்ஸில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதன் முதல் வெள்ளி வரை வறண்ட வானிலை காணப்படும் என்றும் பனி மூட்டமும் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் வடக்கு பகுதியில் ஈரமான வானிலை இருக்கும் என்றாலும், நம்மில் பலரும் பிரகாசமான சூரியன் காயும் நாட்களைக் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




பிரித்தானியாவுக்கு 40 எச்சரிக்கைகள்: வானிலை நிலவரம் -
Reviewed by Author
on
October 16, 2018
Rating:
No comments:
Post a Comment