அண்மைய செய்திகள்

recent
-

மனநல பாதிப்பில் அகதிகள்: அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களை மூடவேண்டும் என கோரிக்கை -


அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த 1400 அகதிகள் மற்றும் புகலிடகோரிக்கையாளர்கள் நவுரு மற்றும் மனுஸ் தீவுகளில் செயல்பட்டு வரும் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நூற்றுக்கணக்கானோர் உடல் ரீதியாகவும் மனநல பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு அவ்வாறான கடல் கடந்த தடுப்பு முகாம்களை மூடுவதற்கான கோரிக்கையை அவுஸ்திரேலியாவிடம் ஐ.நா. அகதிகள் ஆணையம் முன்வைத்துள்ளது.
“கடல் கடந்த முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட அகதிகளின் உடல்நலன் மோசமடைந்து வரும் சூழலிலும் மருத்துவ உதவி குறைக்கப்பட்டு நிலையிலும், ஏதேனும் துன்பகரமான நிகழ்வு நடப்பதற்கு முன் அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவையான மருத்துவ உதவிகளை பெறக்கூடிய வகையில் அந்த அகதிகள் மற்றும் புகலிடகோரிக்கையாளர்கள் உடனடியாக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்,” எனக்கூறியிருக்கிறார் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளரான கேத்ரின் ஸ்டூபர்பீல்ட் (Catherine Stubberfield).
முன்னதாக, நவுருவில் அகதிகளிடையே பணியாற்றி வந்த எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி இருந்தது.

இதைத் தொடர்ந்து, நவுருத்தீவில் அகதிகள் கடுமையான மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதை அம்மருத்துவர்கள் வெளியுலகுக்கு தெரியப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களை மூடுவதற்கான கோரிக்கையை ஐ.நா. விடுத்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லையோர பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, ‘கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம், அவர்களின் படகுகள் திருப்பி அனுப்பப்படும்’ எனத் தொடர்ந்து எச்சரிக்கைவிடுத்து வருகின்றது.

அவ்வாறு பல படகுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன, சுமார் 3000 அகதிகள் மற்றும் புகலிடகோரிக்கையாளர்களை கடல் கடந்த முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டனர்.

நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகியவை அவுஸ்திரேலியா அருகே அமைந்துள்ள சுதந்திரமான தீவு நாடுகளாகும். தற்போதைய நிலையில், சுமார் 800 அகதிகள் நவுருத்தீவிலும், 650 அகதிகள் மனுஸ் தீவிலும் (பப்புவா நியூ கினியா) உள்ள முகாம்களில் சிறைவைக்கபட்டுள்ளனர்.
இவை நடைமுறையில், அவுஸ்திரேலிய உதவியுடன் இயங்கும் தடுப்பு முகாம்களாகவே செயல்பட்டு வருகின்றது.
மனநல பாதிப்பில் அகதிகள்: அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களை மூடவேண்டும் என கோரிக்கை - Reviewed by Author on October 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.