தொப்புளில் தொற்றுகள் அதிகம்: இயற்கையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?
சராசரியாக ஒரு நபரின் தொப்புளில் 67 வகையிலான பாக்டீரியாக்கள் குடியிருக்கின்றன. அத்தகைய தொப்புளில் தங்கியுள்ள தொற்றுகளை இயற்கை முறையில் எப்படி சரிசெய்வது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதோடு அழற்சி மற்றும் வீக்கத்தை விரைவில் சரிசெய்துவிடும். எனவே தினமும் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பது மிகவும் நல்லது.
உப்பு நீர்
உப்பில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதல்தினமும்ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரை தொப்புளில் தினமும் பலமுறை ஊற்றினால் தொற்றுகள் குறையும்.கற்றாழை
கற்றாழை ஜெல்லை தொற்றுள்ள தொப்புள் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தொப்புளைக் கழுவ வேண்டும்.
மஞ்சள் தூள்
மஞ்சளில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை தொற்று ஏற்பட்ட தொப்புளில் தடவி நன்கு காய்ந்த பின் நீரால் கழுவ வேண்டும்.வேப்பிலை
ஒரு கையளவு வேப்பிலையை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தொப்புளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் நீரால் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒத்தடம்
ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான சூடு கொண்ட நீரில் சுத்தமான துணியை நனைத்து பிழிந்து அந்த துணியால் தொப்புள் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் தொப்புள் தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.டீ-ட்ரீ எண்ணெய்
ஒரு நாளைக்கு 2-3 முறை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, அந்த எண்ணெய் கலவையை தொப்புளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
புதினா எண்ணெய்
தினமும் 2-3 முறை 2-3 துளிகள் புதினா எண்ணெயை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து, தொப்புளில் அந்த எண்ணெயைத் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து துடைத்து வந்தால் தொப்புளில் ஏற்பட்ட தொற்றுகள் அகலும்.வெள்ளை வினிகர்
தினமும் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரில், 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி அந்த கலவையை தொப்புளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் நீரால் கழுவினால் சீக்கிரம் தொற்றுகள் சரியாகிவிடும்.
தொப்புளில் தொற்றுகள் அதிகம்: இயற்கையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?
Reviewed by Author
on
October 22, 2018
Rating:
No comments:
Post a Comment